பெண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பல செயல்களை நாம் மறந்தும் செய்யக்கூடாது. அதில் மிக அதிகமாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அதில் சிலவற்றை இன்று தெரிந்துகொள்வோம்.
ஒரு பெண் மாறினால் அந்த வீட்டையும் மாற்ற முடியும். அந்த வீட்டில் இருக்கும் ஆண்களையும் குழந்தைகளும் அவளால் மட்டுமே மாற்ற முடியும். பெண்ணே இது உங்களுக்காக நீங்கள் தெரிந்துகொள்வதற்காக, உங்கள் குடும்பம் செழிக்க, உங்கள் வாழ்வு மலர அறிந்துகொள்.
1. சில நேரங்களில் சத்தம் போட்டு பேசுவதால் எந்த பலனுமில்லை, சத்தம் போட்டு பேசுவதால், சத்தம் மட்டுமே மற்றவர்களின் காதுகளுக்கு கேட்கும். நாம் சொல்லும் விஷயம் எதுவுமே தெரியாது. ஆகவே பொறுமையாக இருந்து விஷயத்தை மட்டுமே எடுத்துக் கூற வேண்டும். புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ள தயாராக இல்லாதவர்களிடம் நீ புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. முடிந்தால் வாழ்க்கையை தனியாகவே போராட கற்றுக்கொள். வாழ்க்கை உன் கையில்.
2. கோவிலுக்கு சென்று நம் மன பாரத்தை குறைக்கலாம் என்று நீங்கள் செல்லும் நேரத்தில் மற்ற கோவில்களில் பெருமை பற்றிய குறைகளையோ, அல்லது பெருமையோ அந்த கோவிலில் பேசக்கூடாது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களைப் பற்றியும் அந்த கோவிலில் பேசவேண்டாம். உங்கள் வேண்டுதலையும் உங்கள் நம்பிக்கையும் மட்டுமே அந்த கோவிலுக்குள் செலுத்திவிட்டு வரவேண்டும்.
3. பல நேரங்களில் பல மன குழப்பங்களால் கண்டிப்பாக நாம் அனைவரும் இரண்டு கைகளால் தலையை சொரிந்து கொள்ளும் நிலைமை வரும். அது பேன் அரிப்பாக இருக்கட்டும் அல்லது மன குழப்பமாக இருக்கட்டும் அப்படி வரும் சமயங்களில் அந்த மாதிரி செய்யாதீர்கள். தலையில் கையை வைத்து எப்பொழுதும் இந்த இரண்டு கையை வைத்து சொரியாதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல, குடும்பத்திற்கும் நல்லதல்ல, முடிந்த அளவிற்கு அதை மாற்றிக் கொள்ளலாம்.
4. கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்து அழகு பார்க்க வேண்டாம். மற்றவர்களின் கையிலும் அதை கொடுக்க வேண்டாம். முடிந்த அளவிற்கு அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் அதுஉங்களுக்கு மங்களத்தையும் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும்.
5. அவசரத்தில் நீங்கள் வேலை நிமிர்த்தமாக வெளியில் போனாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் ஏதோ ஒரு அவசரத்தில் தலையில் சீவிவிட்டு தலை முடியை அங்கேயும், இங்கேயும் வீட்டில் போட வேண்டாம். அதை சுருட்டி எடுத்து குப்பை கூடையில் போட்டு விடுங்கள். வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். அப்படி வீட்டிற்குள் போட்டால் தரித்திரம் நம்மை துரத்தும். அதுமட்டுமில்லாமல் கை கால்களில் நகங்களை வெட்டினால் அதையும் மறக்காமல் வெளியே தூக்கி போட்டு விடுங்கள். வீட்டிற்குள் வைத்துக்கொள்ளக்கூடாது.
6 . கோவில் தரிசனம் முடிந்து அர்ச்சகர் அவர் கையால் விபூதி குங்குமம் கொடுத்தால் மட்டும் அதை வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். மற்றவர் கையில் இருந்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டாம். அர்ச்சகர் கையிலிருந்து வாங்க மறந்து விட்டோம் என்றால் மற்றவர் கையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறை செய்ய வேண்டாம். அப்படி அர்ச்சகர் கையால் கிடைக்கவில்லை என்றால் பிரச்சினையே இல்லை, மற்றவர் கையால் யாரும் வாங்க வேண்டாம்.
7. விஷ்ணு கோவிலுக்கு சென்றால் மறக்காமல் பெருமாளின் தீர்த்தத்தை கையில் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு அதை குடித்துக்கொள்ளுங்கள். குடித்தது போக மிச்சமிருப்பதை தலையில் தடவ வேண்டாம். அது ரொம்ப பெரிய தப்பு, இல்லை என்றால் குடிக்காதீர்கள். குடிக்காமல் தலையில் தொளித்து கொள்ளுங்கள், இரண்டில் ஏதாவது ஒன்று செய்யுங்கள். இரண்டையும் சேர்த்து பண்ணாதீர்கள். ஏனென்றால் அது ரொம்ப தவறு.
8. வீட்டில் கதவின் மேல் நீங்கள் உடுத்திய பழைய துணி ஏதாவது இருந்தால் அதை போட்டு விடாதீர்கள், ரொம்ப முக்கியமாக நிறைய பேர் பாத்ரூம் கதவுகளில் இந்த மாதிரி பழைய துணிகளை போட்டு விடுகிறார்கள், நம்மில் பல பேர் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அது மிகப்பெரிய தரித்திரத்திற்கு வழி, அதை செய்யவே கூடாது. அதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
9. ஈரத் துணியை கட்டிக்கொண்டோ, கையில் எடுத்துக்கொண்டோ எந்த ஒரு தெய்வ ஆலயத்திற்கும் செல்லவே கூடாது. சிலநேரங்களில் அங்கபிரதட்சணம் நான் செய்கிறேன் அதனால் என் துணிமணிகளை ஈரமாக இருக்கிறது, நான் எப்படி கோவிலில் தரிசனம் செய்யாமல் இருக்க முடியும் என்று சொல்லுவார்கள். பொதுவாக பெண்கள் கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சணம் செய்யக்கூடாது, அப்படி இருக்கும் சமயத்தில் நாம் ஈரத்துணியை உடுத்திக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதையும் தவிர்க்க வேண்டும்.
10. சுவாமிகள் வீதி உலா வரும்பொழுது பிரதக்ஷணம் செய்யவே கூடாது. நமஸ்காரம் செய்து கொள்ளலாம். எந்த ஒரு சமயத்திலும் இரு கன்னத்திலும் இரு கைகளையும் வைத்துக்கொண்டு உட்கார்ந்து நின்று கொண்டு இருக்கக் கூடாது, இதுவும் தவறு. பெண்ணே இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாலே போதும் உன் குடும்பத்திற்கு நீங்கள் எடுத்துச் சொல்லமுடியும்.
நீங்கள் சொன்னால் உன் குடும்பம் கேட்கும் கட்டாயமாக, அதில் எந்த மாற்றமும் இல்லை. நமக்கு வரும் பல கஷ்டங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று நமக்கு எதிரொலியாக இருக்குமா என்றால் கட்டாயம் எல்லோருக்கும் தோன்றும். அதனால் சில வழி முறைகளை நம் முன்னோர்கள் நமக்காக விதித்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அதை கையில் எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
சில நேரங்களில் சில அறிவியல் காரணங்களாக இருக்கும். சில நேரங்களில் சில ஆன்மிக காரணங்களாக இருக்கும். பல நேரங்களில் பல பேருக்கு இது முட்டாள்தனமான மூட நம்பிக்கையாக இருக்கும். எதுவாக இருந்தாலும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தை பொறுத்தே என்றும் அமையும்.