கொரோனோ நோய் குறித்த புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்கள், குழந்தைகளை மட்டுமே அதிகளவில் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இளைஞர்களையும் தற்போது அதிக அளவில் தாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மது அருந்துபவர்களுக்கு கொரோனோ வராது என்ற வதந்தி பரவி வந்த நிலையில், கொரோனோ வராமலிருக்க மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை அடியோடு விட வேண்டும் என்றும், சர்க்கரை நிரம்பிய குளிர்பானங்களை தொடவே கூடாது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.