Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆனது …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக அதகிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கும், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று மட்டும் கூடுதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது 7ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக அதிகரித்தது. 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |