Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி இன்று நாடு முழுவதும் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |