தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சுமார் 300-ஐ தாண்டியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரானா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய அவர்களின் ரத்த மாதிரியை சேகரித்து அதன் முடிவுகளை கண்டறிய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிவிடும் அதற்குள் நோய்த்தொற்று அதிகரித்துவிடுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த புதிய கருவியை கண்டுபிடிக்க அமெரிக்க அனுமதி அளித்தது.
இந்த வைரஸ் பாதிப்பை விரைவாக கண்டறியும் வகையில் புதிய கருவியை கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் 45 நிமிடங்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். இந்த சோதனை கருவியை முதலில் மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.