இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341ல் இருந்து தற்போது 370 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின் படி இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.