Categories
தேசிய செய்திகள்

BREAKING : 75 மாவட்டங்களில் மார்ச் 31 வரை போக்குவரத்துக்கு தடை!

கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்புள்ள ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட  75 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |