முந்தைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சேவை, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய பெரிய மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி , கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பலவகைகளில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக வீடுகளுக்கு வந்து மின் பயன்பாட்டை அறிய முடியாத சூழல் உள்ளதால், அனைவரும் கடந்த மாதம் கட்டிய கட்டணத்தை செலுத்தலாம் என்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.