ஐநாசபை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதனை இந்த தீர்ப்பை இந்திய நாடே கொண்டாடியது. இந்நிலையில் மரண தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் விவாதித்து வந்தன. அதன்படி,
மரண தண்டனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரண தண்டனைகளை உலகநாடுகள் முற்றிலுமாக தடுக்க வேண்டும். ஒரு மனித உயிரை எடுபதற்கு எந்த ஒரு நபருக்கும் அதிகாரம் கிடையாது. ஆகவே மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.