Categories
மாநில செய்திகள்

“கொரோனா” படம் வரைங்க…. பரிசை அள்ளிட்டு போங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கொரோனா  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனோ பாதிப்பை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல இடங்களில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில், கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரைபடம், கட்டுரைகள், கவிதைகள் தயார் செய்து 9865120738 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் நல்ல படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தரமான பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |