தமிழகத்தில் மஞ்சள் வேப்பிலையை கிருமிநாசினியாக பயன்படுத்துவதை பார்த்துவிட்டு வெளிநாட்டவர்களும் அதையே பயன்படுத்தி வருவதோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கொரோனோவிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக நேற்று கோயம்புத்தூரில் அரசு பேருந்து ஒன்றின் ஜன்னல் பின்புறம், முன்புறம் என அனைத்து இடங்களிலும் வேப்பிலை கோப்புகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. அதேபோல் பேருந்து படியின் வாசலிலும் மஞ்சள், சாணி கரைத்த கரைசலைத் தெளித்து கிருமிநாசினியாக பயன்படுத்தி வந்தனர்.
இதை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரல் ஆகியது. இதை கண்ட வெளிநாட்டவர்களும் வேப்பிலை கட்டினால் நம்மை அண்டாது என நம்பி வெளிநாடுகளில் ஏதோ ஒரு அப்பார்ட்மெண்டில் பொது மக்கள் வேப்பிலையைச் ஜன்னல் மற்றும் வழிநெடுக வேப்பிலை தோரணங்கள் கட்டி தொங்கவிட்டு மஞ்சள் கரைசலைத் தெளித்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.