இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 370ஆக உயர்ந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 6ஆக அதிகரித்தது. இதை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,
குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.