கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நோய் தடுப்பு முகாமில் தஞ்சமடைய கொட்டும் மழையில் தமிழர்கள் பதிவிற்காக காத்திருக்கின்றன.
கேரள மாநிலத்தில் கொரோனோ தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு அச்சமடைந்த தமிழர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடிவு செய்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள நோய் தடுப்பு முகாமில் தங்களை பரிசோதிப்பதற்காக கூட்டம் கூட்டமாக பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழ்நிலையில் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பதிவிற்காக வரிசையில் நின்று தமிழர்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.