Categories
மாநில செய்திகள்

எத்தனை நாள் ஊரடங்கு போட்டாலும்…. இத மூட முடியாது….. ஏழை..எளிய..மக்கள் மகிழ்ச்சி….!!

கொரோனா ஊரடங்கு அறைகூவல் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் அம்மா உணவகம், மருந்தகம் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். அவரது அறைகூவலை ஏற்று பொதுமக்கள் ஊரடங்கை காலை முதல்  கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் உணவின்றி தவிக்கும் பலர் அம்மா உணவகம் உள்ளிட்ட உணவகத்தை நம்பி இருந்து வந்த சூழ்நிலையில் மூடிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தெரிவித்திருந்த நிலையில்,

தமிழக அரசு அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்தது. இது ஒருபுறம் ஏழை-எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் மற்றொருபுறம் பால் வினியோகம் தமிழகத்தில் நிறுத்தப்படாது என ஆவின் பால் நிலையங்களில் பால் தடையின்றி வழங்கப்படும் மக்களின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் பால் வினியோகத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |