Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ஒருவர் மரணம்….. கைதிகள் மோதல்….. கொல்கத்தா சிறையில் பரபரப்பு….!!

கொல்கத்தா சிறையில் ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் கைதிஒருவர் உயிரிழக்க காவல்துறையினர் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கொல்கத்தாவில் அமைந்துள்ள சிறைச்சாலை இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று. தற்போது கொரோனோ பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு அவ்விடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,

சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அவர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் சிறைச்சாலையில் இருக்கக்கூடிய நாற்காலி மேஜை உள்ளிட்டவற்றை உடைத்து தீயிட்டுக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு கைதி உயிரிழக்க உடனடியாக அதிரடி ரிசர்வ் படை அதிகாரிகள் கைதிகளை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Categories

Tech |