Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கும், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று மட்டும் கூடுதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருந்த நிலையில் தற்போது 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |