Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING : நெல்லையில் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

காலை 11 மணிக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவர்க்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி படுத்தியநிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் இருந்து வந்தவருக்கு , துபாயில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் கலிபோர்னியாவில் இருந்து வந்தவருக்கு சென்னனை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

துபாயில் இருந்து வந்த 43 வயதானவருக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தென் மாவட்டங்களின் கொரோனா தொற்று ஒருவருக்கும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது முதல்நபராக ஒருவருக்கு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |