மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் உங்களிடம் அடிபணிய கூடும். ஆரோக்கியம் மேம்படும். பயணத்தில் சுகம் ஏற்படும். தனக்கென தனி வீடு அமையக்கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று புதிய வீடு மனை வாங்க தடைகள் இருந்தது விலகிச்செல்லும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அத்தனையும் சுலபமாகவே இன்று செய்வீர்கள். அலைச்சல்கள் மட்டும் கொஞ்சம் வரலாம்.
சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். வைரஸ் தொற்றின் காரணத்திற்காக ஒருவரிடமிருந்து 2 மீட்டர் இடைவெளியில் நாம் மற்றவரிடம் உரையாடுவது ரொம்ப நல்லது. பாதுகாப்பானதாக இருக்கும். கூடுமானவரை நீங்கள் அதை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்னும் ஒருசில தினங்களில் நாம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு விடலாம்.
அதற்கு பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு மனநிறைவை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்