Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக, ராசிக்கு…பணிவோடு நடந்தால் அனுகூலப்பலன் கிடைக்கும்.. உடல் நலத்தில் கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..!  இன்று மனைவி மக்களுக்கு ஆரோக்கிய குறைவு கொஞ்சம் ஏற்படும். அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் ஏற்படும். பணமுடை காரணமாக கடன் வாங்க நேரிடும். இன்று வழக்கு வியாபாரங்களில் ஓரளவே வெற்றி கிடைக்கும். உடல்நலம் கொஞ்சம் கண்டிப்பாக நீங்கள் பாதுகாக்கவேண்டும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் கொஞ்சம் வரக்கூடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப தேவை.

நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனம் வேண்டும்.  வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். வாகனத்தை இயக்கும் போது ரொம்ப கவனமாக இன்று இயக்குங்கள். யாருக்கும் இன்று நீங்கள் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். தயவுசெய்து ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நண்பர்களே வைரஸ் தொற்றின் காரணமாக நாம் மற்றவரிடம் இருந்து 2 மீட்டர் அளவில் நம்மளை தனிமைப் படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது .

இன்னும் ஒருசில தினங்களில் இந்த வைரஸை  நாம் முற்றிலும் ஒழித்து விட முடியும். அதற்கு பொதுமக்களாகிய நாம் தான் கடுமையான அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். தயவுசெய்து ஒரு சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், அனைத்து விஷயமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |