கன்னி ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளிலும் பணவரவு ஏற்படக்கூடிய சூழல் அமையும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்க கூடும். புதிய இனிய காதல் உறவு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.
சந்தான பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலமாக இன்று அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளால் இன்று முக்கியமான பணி ஒன்று உங்களுக்கு நிறைவேறும். அதுமட்டுமில்லாமல் வைரஸ் தொற்றின் காரணமாக நாம் மற்றவரிடம் இருந்து 2 மீட்டர் அளவில் தனிமைப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. இன்னும் ஒருசில தினங்களில் இந்த வைரஸை நாம் முற்றிலும் ஒழித்து விடலாம்.
அதற்கு பொதுமக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம் விழிப்புணர்வுடன் இருந்து தொற்றில் இருந்து நாம் முழுமையாக விடுபட வேண்டும். இன்று காலையில் எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் மனம் நிறைவாக காணப்படும் .
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்