துலாம் ராசி அன்பர்களே..! இன்று புண்ணிய தல பயணங்கள் செல்ல நேரிடும். ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் இறங்க மாட்டார்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு உயர் பதவி கிடைக்கும். சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் கிடைக்கும். சில நேரங்களில் பேசும் பொழுது மட்டும் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக் கூடும், அதை மட்டும் நீங்கள் ரொம்ப கவனமாக கையாளுங்கள்.
யாரிடமும் எப்பொழுதும் வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். கணவன் மனைவிக்கு இடையே ஓரளவு பூசல்கள் இருக்கும். சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும். குடும்பத்தாரிடம் கூடுமானவரை அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. பண கடன் பெற்றுத் தருகிறேன் என்று எந்த ஒரு பொறுப்புகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அன்பு நண்பர்களே வைரஸ் தொற்றின் காரணமாக மற்றொரு நபரிடமிருந்து நாம் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நம்மை நாம் தனிமை படுத்தி கொள்வது ரொம்ப நல்லது.
இன்னும் ஒருசில தினங்களில் இந்த வைரஸை நாம் முற்றிலும் தவிர்த்து விடலாம், அதற்கு முக்கியமாக நம்முடைய ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். தயவுசெய்து விழிப்புணர்ச்சியுடன் இருந்து நாம் இது தொற்றை முற்றிலும் ஒழித்து விட கடுமையாக பாடுபட வேண்டும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மயில் நீல நிறம்