மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். பெரியோரிடம் அன்பு மிகுந்து காணப்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். முடிந்தால் இறைவழிபாட்டை இன்றும் மேற்கொள்ளுங்கள் மனம் அமைதியாக காணப்படும். அன்பு நண்பர்களே வைரஸ் தொற்றின் காரணமாக நாம் மற்றொரு நபரிடமிருந்து 2 மீட்டர் அளவில் நம்மை நாம் தனிமைப் படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இந்த வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்து விட இது ரொம்ப முக்கியமாக தேவைப்படுகிறது.
பொதுமக்களாகிய நாம்தான் விழிப்புணர்வுடன் இருந்து இந்த வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்துவிட கடுமையாக போராட வேண்டும். சரி இன்று காலை நீங்கள் எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்