Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு தகவல்.. கடல் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

கடல் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமிக்க உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

நியூட்டனின் மூன்றாம் விதி எது எதற்கு ஒத்துப் போகிறதோ, இல்லையோ, கடலுக்கு நன்கு ஒத்துப்போகும். மேலோட்டமாக பார்க்க அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அசுரத்தனமான ஆட்டம் போடும் குணம் கொண்டது கடல். இன்னும் கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில்  கடலில் இருக்கின்றது.

நிலத்தில் உள்ள அழகையும், ஆபத்தையும் விடம் பல நூறு மடங்கு அழகும், ஆபத்தும் கடலில் இருக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த சமுத்திரங்களும் இருக்கும் நீரின் அளவைவிட, அட்லாண்டிக் பனிப்பாறைகள் அதிகப்படியான நீர் உறைந்து கிடக்கிறது. பனிப்பாறைகள் யாவும் உருகிவிட்டால் கடல் நீர்மட்டம் அதிகரித்து, உலகின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி விடும்.

இதுவரை கடலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 408 வகையான உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் கடலில் 25 மில்லியனுக்கும் மேலான உயிரினங்கள் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இதை வைத்துப் பார்த்தால் இதுவரை கடலில் வாழும் உயிரினங்களில் ஒரு விதத்தை மட்டுமே கண்டு பிடித்துள்ளனர்.

விண்வெளியில் பல ஆண்டுகளை தாண்டி இருக்கும் கிரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள், இன்னும் கடலின் அடிமட்டத்தை  ஆராயவில்லை. இதுவரை கடலை வெறும் 10% தான் ஆராய்ந்து இருக்கின்றனர். ஒருவேளை பசுபிக் சமுத்திரத்தில் எவரெஸ்ட் சிகரம் மூழ்கினாள் அதனுடைய உச்சி கடலின் மேற்பரப்பில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் அடியில் இருக்குமாம்.

வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் 90 சதவீதமான வர்த்தகம் கடல் வழியாக தான் நடக்கின்றது. மற்றும் வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் 50 சதவீதமான தொலை தொடர்புகளும் கடல் மூலமாக தான் நடக்கிறது. கடலின் மிக ஆழமான பகுதி மரியானா ஆழி, இதன் ஆழம் சுமார் 35,000 அடிகள். விண்வெளியை கூட நிறைய பேர் தொட்டு இருக்கலாம் ஆனால்  ஆழியில் அதிக ஆழமான பகுதி வரை சென்றவர்கள் மூன்றே மூன்று பேர்தான்.

அவர்களால் கூட இதன் தரை பகுதியை தொடமுடியவில்லை. உலகில் அதிகமான எரிமலைகள் கடலுக்கு அடியில் தான் உள்ளது. அதாவது உலகில் 90 சதவீதமான எரிமலைகள் தண்ணீருக்கு அடியில் தான் இருக்கிறது. அதனால்தான் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றது.

உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான எவரெஸ்ட் சிகரம் மனிதன் தோன்றுவதற்கு முன்னரே கடலுக்கு அடியில் தான் இருந்ததாகவும், பின்னர் உலகில் ஏற்பட்ட சூழ்நிலைகளின் மாற்றங்களாலும், இயற்கை பேரழிவு நாளும் மேலெழுந்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது பல இடங்களில் கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இப்பொழுதும் கிடப்பதை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

Categories

Tech |