சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் 24873 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும், உயிரிழப்பு 94ஆக உள்ளது.
அந்நாட்டில் நோய் பரவலைத் தடுக்க அதிபர் ஏஞ்சலா மெர்கல் போர்க்கால அடிப்படையில் பணி செய்துவரும் நிலையில், அவருக்கு கொரானா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏஞ்சலா மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வரும் இரண்டு மூன்று நாள்களில் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்போவதாகவும் ஏஞ்சலா மெர்கல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை அதிபரின் பொறுப்புகளை அந்நாட்டின் துணை அதிபரும் நிதியமைச்சருமான ஒலாஃப் ஷோல்ஸ் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.