சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 390 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பில் இருந்து 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.