Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி உத்தரவு ….!!

தனிமைப்படுத்த  அறிவுறுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளையாக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதே போல வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,வெளிநாடுககளில் இருந்து  வந்தவர்கள் வீட்லேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற  தமிழக அரசின் அறிவுறுத்தலை மீறி வெளியே வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அரசின் அறிவுறுத்தலை மீறி அவர்கள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரெல்லாம் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டு  தனிமையில் இருக்கின்றார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |