Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏன் ? இப்படி பண்ணுறீங்க….. விதிமுறையை ஒழுங்கா பின்பற்றுக – மோடி கவலை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பால்கனியில் வந்து நின்று மக்கள் கைகட்டி உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அந்த நிலைமை அப்படி தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள்.

தலைநகர் டெல்லி தொடங்கி இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான மாநிலங்களில் இந்த காட்சிகளை நான் பார்க்க முடிந்தது. இது குறித்து தான் தற்போது பிரதமர் மோடி தனது கவலையைத் தெரிவித்து இருக்கின்றார். தயவுசெய்து அரசின் விதிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய மக்கள் கொரோனாவின் தீவிரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அரசாங்கங்கள் சொல்லக்கூடிய அத்தனை விதிமுறைகளையும் மக்கள் தயவுகூர்ந்து நீங்கள் பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் மாநிலத்தில் என்ன மாதிரியான சட்டங்கள் மற்றும் விதிகள் அமுல்படுத்துகிறார்களோ அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும், அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை தற்போது மோடி வெளிப்படுத்தி இருக்கிறார். சுயஊரடங்கு நேற்று முடிந்த நிலையில் மக்கள் இன்று தங்களின் வழக்கமான பணிகளை தொடங்கி விட்டார்கள் எனவே தற்போது பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |