இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 தடியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 415 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதே நேரத்தில்315 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100 அதிகரித்து 415ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 7 பேர் உயிரிழந்ததாகவும் , 17,493 பேரின் சளி , ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 415 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Total number of positive Coronavirus cases in the country is 415 and 7 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/dKtaPhrHSo
— ANI (@ANI) March 23, 2020