காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியமாக தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 தற்போது உயர்ந்திருக்கிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடைகள் அனைத்தும் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக் கூடிய சிறிய அளவிலான மல்லிகை அங்காடிக் கடைகள் மற்றும் காய்கறி அங்காடி கடைகள் மற்றும் மருந்து கடைகளை தவிர இருக்கக்கூடிய பெரிய மளிகை கடைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகள், நகை கடைகள் மற்றும் துணிகள் ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை திறக்க கூடாது என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.