Categories
தேசிய செய்திகள்

சென்னை மெட்ரோ பார்க்கிங்கில் இருக்கும் வாகனங்களை எடுத்து செல்லுமாறு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் அடங்கும். இதனால் தமிழகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கட்டுள்ளது.

வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்டவை மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் செயல்படாது என்பதால் மெட்ரோ பார்க்கிங்கீழ் இருக்கும் வாகனங்களை எடுத்துச் செல்லுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. அதில், மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்கள் இன்று மட்டுமே பணியில் இருப்பார்கள். அதனால் பார்க்கிங்கில் இருக்கும் வாகனங்களை இன்று மாலைக்குள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |