Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்களா சொல்லீருங்க….. சிக்குனீங்க அவ்வளவு தான் – அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆவேசம்க்கான பட முடிவுகள்

கொரோனா அறிகுறி உடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . அதேபோல வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என பல உத்தரவுகளை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி சுற்றுவதாக தகவல் வந்து கொண்டு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |