உச்சநீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியான விசாரணை கிடையாது என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளை மூட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை எடுக்க வழக்கறிஞர்களுக்கு நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்திற்கு 4 வாரம் விடுமுறை வழங்க வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு செய்த நிலையில் தேதி குறிப்பிடாமல் விடுமுறை வழங்கபட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் நேரடியான விசாரணை கிடையாது என அறிவித்துள்ளனர்.