Categories
மாநில செய்திகள்

மதுரை சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம்… மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி – முதல்வர் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்,

  • சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி சேதமடைந்துள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
  • 41,333 அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 12.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை மைலாப்பூரில் ரூ. 9 கோடியில் சமூக நலத்துறை கட்டடம் கட்டப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் “அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பக”த்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், 10 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • முதல்வர் மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்
  • சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் சமுதாயக்கூடம், புதிய பள்ளிகள் அமைக்கப்படும்.
  • ரூ. 24. 25 கோடியில் சமுதாயக்கூடம், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிறமலைக் கள்ளர் பள்ளிகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

Categories

Tech |