ஜப்பானில் கொரோனா பீதியால் செர்ரி பூக்களை ரசிக்க யாரும் வராததால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் மார்ச் மாத ஆரம்பம் முதல் மே மாதம் இறுதி வரை வசந்த காலமாகும். தற்போது அங்கு வசந்த காலம் நிலவி வருகிறது. அதன் காரணமாக செர்ரி பூக்கள் அதிக அளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புகுவோகா, ஒசாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களில் இருக்கும் பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கி விட்டது.
இந்நிகழ்வை கண்டு ரசிப்பதற்க்கே ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் பூங்காக்களில் கூடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
ஆம், ஆள் நடமாட்டம் இல்லாமல் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. காரணம், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தான். கொரோனா பீதியால் பூங்காக்களுக்கு யாருமே வரவில்லை.
இந்த நிலையில் ஜப்பான் அரசு விடுமுறை விடப்பட்ட பள்ளிக்கூடங்களை விரைவில் திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைவுதான். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய உண்மையான தகவலை ஜப்பான் மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.