புதுச்சேரியில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில் தற்போது முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்தித்தார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று இரவு 9 முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு உத்தரவு அமுலில் இருக்கும்.
மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். தொழிற்சாலைகளும் மூடப்பட வேண்டும்.உணவு விடுதிகளை பொருத்தவரை பார்சல் மட்டுமே கொடுக்கவேண்டும். ஆன்லைன் உணவு வினியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நகருக்கு செல்ல கூடாது. அத்தியாவசிய தேவையை கருதி மட்டுமே செல்ல வேண்டும் என்ற பல்வேறு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.