சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்களை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்திய நிலையில் வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் இருந்து வந்தவர்கள் யார் ? என்ற பட்டியலை தயார் செய்து சென்னை மாநகராட்சியில் இருக்கும் 3000 வீடுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் தனிமையில் இருப்பவர்களின் வீட்டை அடையாளப்படுத்தும் வகையில் அவரின் பெயர் , முகவரி , நம்பர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஸ்டிக்கர் வீட்டு வாசலில் ஓட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.