Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : +1 தேர்வை ஒத்தி வைக்க முடிவு ?

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாய் +1 தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல +1 , +2 பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டுமென ஆசிரியர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை வசித்துவந்த நிலையில் திட்டமிட்டபடி +1 , +2 தேர்வு நடைபெறுமென்று அரசு தெரிவித்து வந்தது.

இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு , அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் பொதுத்தேர்வு மாணவர்கள் எப்படி தேர்வு எழுதுவார்கள் என்ற நிலையில் +1 தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளையொடு +2 தேர்வு முடிவடைகின்றது இதனையடுத்து +1 தேர்வை ஒத்திவைக்கலாமா என்ற ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை சென்னை உயர்நீதிமன்றமும் கூட பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க அறிவுறுத்திய நிலையில் கல்வித்துறை இப்படியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனா குறித்து அடுத்தடுத்து புதுப்புது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால் விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |