Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் 1000 கிடைக்கும். இந்த நிலையில்தான் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதனால் தனக்கும் கொரோனா வந்து விடுமோ என்று பயந்து போன அவர், சொந்த ஊருக்கு கடந்த வாரம் திரும்பினார். ஆனால் அவர் சற்று மன கஷ்டத்துடனேயே ஊருக்குச் சென்றார். ஏன் என்றால் கேரளாவில் கிடைக்கும் வருமானம் சொந்த ஊரில் அவருக்கு கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் உயிருக்கு பயந்து போன அவருக்கு, அங்கு சரியான வேலை இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்தநிலையில் கிடைத்த வேலையை செய்து வந்த இசருல் ஷேக், அதில் கிடைத்த பணத்தை வைத்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.

அதில், அவருக்கு அதிர்ஷ்டவசமாக ரூ 1 கோடி விழுந்துள்ளது. இதனால் அவர் கோடீஸ்வரராக மாறிவிட்டார். இதையடுத்து மகிழ்ச்சியில் வெள்ளத்தில் ஆழ்ந்த அவர் கூறுகையில், இனி நான் தச்சர் வேலை செய்யப்போவது கிடையாது. சொந்தமாக தொழில் தொடங்க இருக்கிறேன். அதோடு புதுவீடு கட்டி எனது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு இந்த லாட்டரி பணத்தை வைத்து ஏற்பாடு செய்வேன் என கூறினார்

Categories

Tech |