தமிழகத்தில் +1 ,+ 2 தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக அளிக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும், 11ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்று கூட தேர்வு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரை தேர்வு நடைபெறுவதாக தெரிவித்தார். அப்போது +1 , +2 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான போக்குவரத்தை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்
இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வ தகவலை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கும் சுற்றைக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. அதன் அப்படி நாளை நடக்கும் +2 தேர்வை 10.30 மணிக்கு தொடங்கி 1.45 வரை நடத்தவேண்டும் என்றும் , மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 2.45 வரையும் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.