மீனம் ராசி அன்பர்களே..! இன்று குவியும் வெற்றிகளால் சந்தோஷம் நிலவும். மனதில் தெம்பு ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை கொஞ்சம் தூண்டுவதாக அமையும்.
அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் வந்தாலும் கவலை வேண்டாம். அது உங்களுக்கு நல்லதாகவே அமையும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக கொஞ்சம் பாடுபடுவீர்கள். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்