தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் நாளை முதல் அமலில் இருக்கும் 144தடை உத்தரவு ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் , பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்.