கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.