144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்யாண வீடுகளில் 30 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்து வருகிறது. நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட நிலையில் மாவட்ட எல்லைகளையும் மூட மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த 144 தடை உத்தரவு குறித்த விளக்கம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ,
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் கடந்த 16ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும் திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு அனைத்து கல்லூரி, வேலைய்வாய்ப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.