மகரம் ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும்.
சக ஊழியர்களின், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். சரிங்க இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். நம்முடைய இல்லத்தை இன்று நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட திசை-: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்