தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் உருவாகும். பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய்கள் கொஞ்சம் ஏற்படும். உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். பணவரவில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். பயணங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.
பயணங்களின் பொழுது உடைகளின் மீது கவனம் இருக்கட்டும். புதிய நபர்களின் மீதும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கியும் ஓரளவு வசூலாகும். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியம் ஓரளவு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்