கன்னி ராசி அன்பர்களே..! இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தை நீங்கள் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். வெளியூர் பயணங்களில் ரொம்ப கவனம் வேண்டும். அமைதியும் ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களை குறைக்கும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். இடமாற்றம் வெளியூர் பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் இன்று கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். கொஞ்சம் நிதானமாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் நீங்கள் சரிசெய்யலாம். அரசு அதிகாரிகளிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்