சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த தனவரவுகள் ஏமாற்றம். இன்றும் மனைவியின் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொழிலில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. இன்று வரவு இருக்காது ஆனால் செலவு மட்டும் அதிகமாகவே இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுடன் செய்யுங்கள். மனக்குழப்பம் ஏதும் வேண்டாம். எதிர்ப்புகள் ஓரளவு அகலும். காரிய அனுகூலம் ஏற்படும்.
முக்கிய நபர்களின் உதவிகளும் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்