கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் வெட்டி செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே மனைவியால் மனக்கசப்பு ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாகவே இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.
பயணத்தின்போது கவனம் இருக்கட்டும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை ஏற்படும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சமூக சிந்தனையுடன் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்