Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… பகைவர்கள் விலகி செல்வார்கள்… எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பகைவர்கள் உங்களுடைய பாதையை விட்டு விலகி செல்லக்கூடும். கேட்காமலேயே உதவுவதற்கு முன் வருவார்கள் நண்பர்கள். வீடு மனை வாங்க போட்ட திட்டம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும். இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும், பயணங்களின் பொழுது கொஞ்சம் எப்பொழுதும் போலவே கவனம் இருக்கட்டும். நல்ல பெயரும் புகழும் இன்று உண்டாகும்.

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று சந்திக்கக்கூடும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். இன்று  செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், மிகவும் சிறப்பாக இருக்கும். கூடுமானவரை நம்முடைய இல்லத்தை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |