Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் நினைச்சு கூட பாக்கல…. ”ரொம்ப கஷ்டமா இருக்கு”….. மோடி வேதனை …..!!

மக்கள் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை , விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட்டம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்தியர்கள் அனைவரும் வீட்டின் பால்கனியில் இருந்தோ அல்லது வீட்டின் வெளியே வந்து முற்றத்தில் இருந்தோ மக்கள் கைகட்டி நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் நேற்றைய முன்தினம் தினம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக வடமாநில மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். தலைநகர் டெல்லி தொடங்கி இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான மாநிலங்களில் இந்த காட்சிகளை  நாம் பார்க்க முடிந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்த தனிமையை மேற்கொள்ள வேண்டும் , மக்கள் கூட கூடாது என்பதை தாண்டி பிரதமர் சொன்ன இந்த நிகழ்வை மக்கள் ஓன்று கூடி கொண்டாட்டமாக நடத்தினர். இதனால் தான் பிரதமர் மோடி நேற்று காலை கவலையை தெரிவித்திருந்தார். அதில் தயவு செய்து அரசின் விதிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய மக்கள் கொரோனாவின் தீவிரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை மாநில அரசாங்கங்கள் சொல்லக்கூடிய அத்தனை விதிமுறைகளையும் மக்கள் தயவுகூர்ந்து பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் என்ன மாதிரியான சட்டங்கள் மற்றும் விதிகள் அமுல்படுத்துகிறார்களோ அதனை முழுமையாக பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என்று வேதனையை பகிர்ந்துள்ளார்.

ஏன் ? இப்படி பண்ணுறீங்க….. விதிமுறையை ஒழுங்கா பின்பற்றுக – மோடி கவலை ….!!

அப்படி மக்கள் என்ன செய்தார்கள் ? அவர்களின் கொண்டாட்டம் என்ன ? வடமாநில மக்கள் என்ன செய்தார்கள் ? பிரதமரே வேதனை அடையும் வகையில் அப்படி என்ன நடந்தது என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நேற்று ட்விட்டரில் #stupidity  என்ற ஹேஷ்டக்கில் பல வீடியோ வைரலாகி வருகின்றது. இதனை தொகுத்து உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம் .

https://twitter.com/2Oriental/status/1242107878699237377

https://twitter.com/imoon69/status/1241976047266074624

https://twitter.com/PrintInsider/status/1241974045970542592

https://twitter.com/Armaana97965485/status/1241894144449974272

Categories

Tech |